
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி, தயாரிக்கும் புதிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யாவுடன் பார்த்திபனும் நடித்துள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. டிசம்பர் இறுதியில் படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார் பார்த்திபன். வருகிற டிசம்பர் 4ஆம் தேதி பாடல்கள் வெளியிடப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இந்த விழாவை தனது குரு கே.பாக்யராஜை கௌரவிக்கும் நாளாக கொண்டாடுகிறார்.
இந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு பரிசுப்போட்டியையும் அறிவித்துள்ளார் பார்த்திபன்.. அதாவது, இந்த விழா அழைப்பிதழுடன் கோடிட்ட இடங்களை நிரப்பும் விதமாக ஒரு கேள்வித் தாளையும் கொடுத்து வருகிறார் பார்த்திபன். அதற்கு சரியான பதிலை பூர்த்தி செய்து விழா நடக்கும் அரங்கில் உள்ள பெட்டியில் போட வேண்டும். சரியான விடை எழுதியிருப்பவர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படுமாம்.


