உதயநிதி படங்களின் பப்ளிசிட்டியில் பாதிப்பங்கு ரஜினிக்குத்தான்..!


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல ரஜினி நடித்த படங்களின் டைட்டிலுக்கு மட்டுமல்ல, அவர் பேசிய பஞ்ச் வசனங்கள். அவர் பாடலின் மிக முக்கிய வரிகள் கூட கமர்ஷியல் வேல்யூ உள்ளவைதான். ஒரு படத்தை ஆடியன்சிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பாதி வெளியை அவை செய்துவிடுகின்றன..

ரஜினி நடித்த ‘மனிதன்’ பட தலைப்பை தனது படத்திற்கு தலைப்பாக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு இனி அவரது படங்களை விட பாடல்கள், வசனங்கள் ஆகியவற்றில் இருந்து ஏதாவது ஒரு டைட்டிலை பிடித்துவிடலாம் என்பதுதான் திட்டம்.

அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இது முரட்டுக்காளை’ படஹ்தில் ரஜினி பாடிய பாடலின் முதல்வரி ஆகும்..

இதேபோல சந்திரமுகி’ படத்தில் ரஜினியின் புகழ்பெற்ற வசனமான ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற வசனத்தையும் ஏற்கனவே தனது இன்னொரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளார். உதயநிதி.

Leave a Response