‘அண்டாவ காணோம்’ டீசரை வெளியிட்டார் ஹன்ஷிகா..!


‘திமிரு’ படத்துல வில்லித்தனம் காட்டிய ஸ்ரேயா ரெட்டி பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. படத்தின் பெயர். ‘அண்டாவ காணோம்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக அல்ல என்றாலும் கதையின் நாயகியாக நடிப்பதில் ஸ்ரேயா ரெட்டிக்கு சந்தோசம் தான்.

தனது தாயார் சீதனமாக கொடுத்த அண்டாவை பொக்கிஷமாக பாதுக்க்கிறார் ஸ்ரேயா ரெட்டி.. தனது தாகவே அதை நினைக்கிறார். ஒருநாள் அது தொலைந்துபோக, அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை.. படத்தை வேல்மதி என்பவர் இயக்கியுள்ளார். ஜே.எஸ்.கே பிலிம்ஸ் வெளியிடும் இந்தப்படத்தின் டீசரை ஹன்சிகா நேற்று வெளியிட்டுள்ளார்.

Leave a Response