வளரும் கலைஞர்களுக்கு இசையமைப்பாளர் தினாவின் அறிவுரை..!


அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு பிரபாகரன், ஜி.என்.ஆர்.குமாரவேலன், இசையமைப்பாளர்கள் தினா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தினா, சினிமாவில் குடிப்பழக்கம் உருவாக புதிய கோணத்தில் காரணம் ஒன்றை கூறினார்..

“பொதுவாகவே சினிமாவில் நாம் வேலையில்லாமல் தயாராக இருக்கும் போது வாய்ப்பு தரமாட்டார்கள். வாய்ப்பு தரும் போது நேர அவகாசம் கொடுக்க மாட்டார்கள் பகலில் 9 மணி முதல் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு முடித்து விட்டு வருவார்கள். நாளைக்குப் பாடல் காட்சிகள் எடுக்கவேண்டும் இன்றிரவே பாடல் கொடுங்கள் என்பார்கள். அப்படி அவர்கள் வரும் போது பகல் எல்லாம் வேலை பார்த்த களைப்பு என்று பாட்டிலைத் திறப்பார்கள் நமக்கும் கொடுப்பார்கள்.. அப்புறம் என்ன ஆகும்? எப்படியோ இரவே வேலை வாங்கி விட்டு சென்று விடுவார்கள்.

இரவுத்தூக்கம் கெட்டு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி துன்பப்படும் போது எந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் வரமாட்டார்கள். உங்கள் உடம்பை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் முக்கியம் அதன் பிறகு தான் தொழில்.” என்று வளரும் கவிஞர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

Leave a Response