நான்கு சீனியர் ஹீரோயின்களை வைத்து படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்..!


வானவில் வாழ்க்கை படத்தின் மூலம் இயக்குனராக மாறிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவக்கியும் விட்டார்.. இந்தப்படத்தில் நான்கு குடும்பத்தலைவிகளின் நட்பை பற்றி சொல்ல இருக்கிறார்.. ராதிகா, சுகாசினி, ஊர்வசி, குஷ்பூ ஆகிய நால்வரும் தான் அந்த கேரக்டரில் நடிக்கிறார்கள்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஆஸ்திரேயாவில் ஒரே ஷெடூலில் நடக்க இருக்கிறது.. இதற்காக நான்கு நடிகைகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளனர்.. சிட்னி, மெல்போர்ன், கான்பெரா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Leave a Response