
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுகாசினியிடம் உங்களுக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் இல்லையா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா என கேட்பது மோசமான கேள்வி .
கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும்தான் அரசியலுக்கு வரலாம். அது எல்லாம் மக்களின் கையில்தான் உள்ளது. ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்ததுபோல், ராதிகா, ரேவதி, நதியா, சுஹாசினிக்கும் பொறுப்பு கொடுங்கள் . நாங்களும் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறோம்” என்றார்.


