
‘கபாலி’ படத்தின் ஒரு நிமிட டீசருக்கு கிடைத்த வரவேற்பு நாடறிந்த விஷயம்.. வேதாளம், தெறி என இளைய ஹீரோக்களை எல்லாம் ஓரங்கட்டி என்றைக்கும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என சொல்லாமல் சொன்னது.. அதன்பின் ஆடியோ ரிலீஸை எளிமையாக நடத்தினார்கள்.. அதன்பிறகு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. ட்ரெய்லரை வெளியிடாததற்கு அப்படி என்ன காரணம் இருக்கமுடியும்..?
இதுபற்றி படக்குழுவினரிடம் கேட்டால், “டீஸர் மற்றும் பாடல் டீஸர் இரண்டுக்குமே பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆசியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீஸர் என்ற பெருமை ‘கபாலி’க்கு கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள், டீஸர் என வெளியிடப்பட்டு இருக்கிறது. அனைத்தையும் மீறி படமும் வெளியீட்டுக்கு நெருங்கிவிட்டது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இதனால் ட்ரெய்லர் வேண்டாம் என முடிவுசெய்தோம்” என்று கூறுகிறார்கள்.


