திமுகவுடன் மறைமுகப் பேச்சு நடத்துகிறாரா விஜய்? – மக்கள் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை, ஆத்தூர் தொகுதி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்போது, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், திமுக ஆட்சியில் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு இருப்பவர்களுக்கும் மீண்டும் வீடு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் ராஜ்மோகன்,என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர்.அமைச்சர்கள் பேசும்போது,தவறு நடந்திருக்கலாம் என்று
ஒப்புக்கொள்கின்றனர்.ஆதாரங்களை நாங்கள் காட்டும்போதே இப்படிப் பேசுகின்றனர்.
முதல்வர் ஆதாரங்களை வைத்திருக்கிறார்.ஒருவேளை அவர் எடுத்துக் காட்டினால்…எதிர்க்கட்சியினர் நிலைமை கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது என்றார்.

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய்,நான் எதுவும் சொல்லவேண்டாம் என்றுதான் நினைத்தேன்.ஆதாரம், ஆதாரம் என்று கேட்கின்றனர்.ஒரு வாரத்துக்கு முன்பாக, நிதியமைச்சர் பேசும்போது,3 துறைகளை ஆய்வுசெய்து அது தொடர்பான கோப்புகள் என் மேஜையில் இருப்பதாகக் கூறினார்.அவர் ஏதோ போகிற போக்கில் அதைக் கூறவில்லை.உண்மையிலேயே எனது மேஜையில் உள்ளன.அத்தனையும் ப்ரூப் உடன் இருக்கிறது.ஓபன் பண்ண வச்சுராதீங்க.எதை எப்போ ஓபன் பண்ணனுமோ,அப்போ எல்லாமே கரெக்டா ஓபன் ஆகும்.மக்கள்கிட்ட எப்போ பேசணும்,என்ன பேசணும்,எப்படிப் பேசணும்னு எல்லாம் பேசிட்டுதான்,அன்பா,ஆசையா எங்கள் எல்லோரையும் கொண்டுவந்து இங்கு உட்கார வைத்துள்ளார்கள்.நான் பேசுவேன்.பேசக்கூடாது என்பதில்லை.இடைத்தேர்தல்லயாவது சிலபேருக்கு நல்லது நடக்கணும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.திமுக ஆட்சியில் 3 துறைகளில் தப்பு நடந்திருக்கிறது ஆதாரத்துடன் இருக்கிறது என்று சொல்லும் முதல்வர்,அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?அதோடு அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது ஏன்? இதன்மூலம்,அவற்றை வெளியிடாமல் இருக்க திமுகவுடன் மறைமுகப் பேச்சு நடத்துகிறாரா? இல்லையெனில் உடனே அவற்றை வெளியிட வேண்டியதுதானே?என்கிற கேள்விகளை மக்கள் கேட்கின்றனர்.

Leave a Response