உதயநிதி முதலமைச்சர் எடப்பாடி துணைமுதலமைச்சர் – திடுக்கிடும் திருப்பம்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடந்துவருகிறது.

தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. மாலை ஆறு மணி நிலவரப்படி அக்கட்சி 107 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.

திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 54 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது.இதனால் இவ்விரு கட்சி முன்னணியினரும் தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனிப்பெரும் கட்சியாக விஜய் கட்சி இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளை அக்கட்சியால் பெற முடியவில்லை.

இதேநிலைதான் இறுதிச்சுற்றுவரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் ஒரு பேச்சு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருசிலர் இதுகுறித்து சமூக வலைதளப் பக்கங்களிலும் பேசத்தொடங்கியுள்ளனர்.

அது என்னவெனில்?

விஜய் கட்சியில் பெரும்பாலான வேட்பாளர்கள் திமுக மற்றும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தாம். நம் கட்சியினரை வைத்தே நம் கட்சிகளைத் தோற்கடித்துவிட்டார்.ஆனாலும் அவருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் அவரை வைத்துக் கொண்டு பாஜக உள்ளேவர வாய்ப்பிருக்கிறது. இதனால் இப்போது திமுக 55 இடங்களில் முன்னிலை பெறுகிறது.கூட்டணியாகச் சேர்ந்தால் 73 தொகுதிகள் பெறுகிறது. அந்தப்பக்கம் அதிமுக தனியாக 48 தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது.

இவற்றைச் சேர்த்தால் மொத்தம் 121 தொகுதிகள் வருகின்றன.அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிடும்.எனவே திடீரென விஜய் வந்து ஆட்டத்தை மாற்றியது போல் திமுகவும் அதிமுகவும் இணைந்து அந்த ஆட்டத்தை மாற்றி ஆடவேண்டும்.

திமுக அதிக எண்ணிக்கை வைத்திருப்பதால் உதயநிதி முதலமைச்சர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் என்றும் உடன்பாடு செய்துகொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

கனவிலும் நினைக்க முடியாத இப்படி ஒரு கணக்கும் அரசியலரங்கில் உலவத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Leave a Response