தகுதியுள்ள தமிழரை நிராகரித்த ஒபாமா

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான ஸ்ரீனிவாசன் பெயரை அமெரிக்கா அதிபர் ஒபாமா பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் வெளியான  நிலையில், அவரது பெயரை நிராகரித்து மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த  நீதிபதி அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் திடிரென உயிரிழந்ததையடுத்து, புதிய நீதிபதி தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதையடுத்து அவருடைய இடத்தை நிரப்ப புதிய நீதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.
இந்த வாய்ப்பில் முதலிடத்தில் அமெரிக்க இந்தியரான சீனிவாசன் இருந்தார். அவர் தான் உச்ச நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அவரது பெயரை நிராகரித்து கார்லெண்ட் பெயரை ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனின் நடைபெற்ற நிகழ்ச்சியில், மெர்ரீக் கார்லாண்டை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை முறையாக வெளியிட்டார்.இது குறித்து ஒபாமா கூறுகையில், கார்லேண்ட் மிகவும் நேர்மையானவர், பண்பு உள்ளவர். பரிந்துரையில் உள்ள மற்ற நீதிபதிகளை விட கார்லேண்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். எனவே அவரை தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
 அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒரு தமிழர் வருவார் என்ற எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Leave a Response