ஒரேமேடையில் சசிகலா டிடிவி.தினகரன் ஓபிஎஸ் – தொண்டர்கள் உற்சாகம்

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ​அதன் தலை​மைக் கழகச் செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னான
ஆலோ​சனைக் கூட்​டம் மூத்த தலை​வர் பண்​ருட்டி இராமச்​சந்​திரன் தலை​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் உள்ள ஒய்​எம்​சிஏ அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கிவரும் நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து
ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் முன்​னாள் முதலமைச்சர் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசும்​போது,

மதுரை மாநாட்​டில் தொண்​டர்​கள் எதிர்​பார்க்​கும் முடிவை அறி​விப்​போம். கட்சி நிர்​வாகி​கள் யாரும் எதிரணி​யினரை விமர்​சிப்​பதை தவிர்க்க வேண்​டும் என்​றார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது….

மதுரை​யில் செப்டம்பர்​ 4 ஆம் தேதி மாநிலம் தழு​விய மாநாடு நடத்​தப்​படும். அதில் பல முக்​கிய கொள்கை
முடிவு​கள் எடுக்​கப்​படும். அது வெற்றி மாநா​டாக​வும், அதி​முக தொண்​டர்​கள் அனை​வரும் இணை​யும்
மாநா​டாக​வும் இருக்​கும். மதுரை மாநாட்​டுக்கு டிடிவி.தினகரன் மற்​றும் சசிகலா​வுக்கு அழைப்பு விடுக்​கப்​படும்.

எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் விசு​வாசமிக்க தொண்​டர்​களை ஒருங்​கிணைப்​பது​தான் எங்​கள் கொள்​கை, அதில் வெற்றி பெறு​வோம். திமுக ஆட்​சியைத் துடைத்து எறிய அனை​வரும் ஒருங்​கிணைய வேண்​டும் என மக்​கள் நினைக்​கின்​றனர். விஜய்க்கு எப்​போதும் எங்​கள் ஆதரவு இருக்​கும். தற்​போது வரை அவர் சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

புதுக்​கட்சி தொடங்​கு​வீர்​களா? தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறீர்​களா? அதி​முகவை பாஜக விழுங்கி விடுமோ? என்றெல்லாம் செய்​தி​யாளர்​கள் கேட்​டனர்.

அதற்​கு, எங்​களைப் பொறுத்​தவரை அதி​முக​தான் உயிர் நாடி இயக்​கம். சட்​டப்​போ​ராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. அதில் தொண்​டர்​கள் வெற்றி பெறு​வார்​கள்.சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் உள்​ளன.
எதிர்​காலத்​தில் என்ன வேண்​டு​மா​னாலும் நடக்​கலாம். அதி​முக வரலாற்றை எடுத்துப் பார்த்​தால் எத்​தனையோ முதலைகள் விழுங்கப் பார்த்​துள்​ளன. ஆனால் அது நடை​பெற​வில்​லை. அதி​முக எப்​போதும் மக்​கள் கட்​சி
என்​றார்.

இதில், சட்டப்போராட்டம் நடைபெற்றுவருகிறது அதில் தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் சொல்லியிருப்பதும் செப்டம்பர் மாநாட்டில் சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோருக்கு அழைப்பு என்று சொல்லியிருப்பதும் அவருடைய ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response