ஆறு வயது சிறுவனைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைக் கண்டித்துப் போராட்டம்

இலங்கையில் அரசியல் சாசனத் திருத்தம், தமிழருக்கு உரிமை, அதிகாரப்பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பிரச்சாரத்தினை பொய்யாக்கிய 6 வயது சிறுவன் படுகொலை. தர்சன் எனும் சிறுவனை பாலியலாக சீரழித்து , ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றி வீசி எறித்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்கள ராணுவம்.
தமிழனுக்கு குரல் கொடுப்பதாக வேடம் போடும், இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, அல்லது ஐநா சபையின் சிறுவர்களுக்கான உரிமை அமைப்புகளோ, யூனிசெஃப் அமைப்போ இதுவரை ஏதும் கண்டிக்கவில்லை. சிறுவர் போராளிகள் என பேசிக்கொண்டிருந்த சோ-கால்டு மனித உரிமை ஏஜெண்டுகளும் பேசவில்லை.
புலிகளில் சிறுவர் போராளிகள் இருப்பதாக பெரும் பிரச்சனையை கிளப்பி, விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்திய சோ-கால்டு முற்போக்காளர்களின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது தர்சனின் பச்சைப்படுகொலை. ஏன் இதுவரை இந்தக் கும்பல்கள் வாய்திறக்கவில்லை?…
இப்படுகொலைகளை மறைத்து, இலங்கையில் அரசியல் சாசனம் திருத்தப்படுகிறது. தமிழர்கள் பங்கேற்பு நடக்கிறது என்று சந்திரிகா ஆதரவு பிரச்சாரம் செய்யும், பயங்கரவாத ஊடகம் தி இந்து முதல் எவரும் இது குறித்து செய்தி பதிவு செய்யவில்லை.
ஈழ விடுதலைப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. உங்களது ஊளைச்சத்தம் எங்களை அச்சப்படுத்தவில்லை. ஈழ மக்கள் தனிமைப்படுத்தப்பட வில்லை. இந்தியப் பொறுக்கிகள் வெற்றிபெற நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதும் இல்லை. மே 17 இயக்கம் சமரசமற்ற போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கும். தர்சன் கொலைக்கான நீதியும், இனப்படுகொலைக்கான விசாரணையையும் கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 12ஆம் தேதி முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவின் அலுவலக முற்றுகையையும் அறிக்கிறோம்.
எங்களது தனிப்பட்ட அழைப்பிற்காக காத்திருக்காமல் கலந்து கொள்ளுங்கள். பெரும் திரளாக திரண்டால் தர்சன் போன்ற சிறுவர்களின் உயிரைக் காக்கலாம். இலங்கையின் முகத்தில் எட்டி உதைக்கலாம். இந்தியாவின் முகத்திரையை கிழிக்கலாம்.
எந்த அமைப்பாக இருந்தாலும் சரி கைகோர்க்க வாருங்கள். போராட்டத்தினை முன்னெடுக்க வாருங்கள். நீதி கேட்போம்.
ஈழப்படுகொலையின் அக்கிரமத்திற்கு எதிராகவே போராட மே17 இயக்கமாக வந்தோம். அதில் சமரசமில்லை.
போராட வாருங்கள். முத்துக்குமாரை நேசிப்பவர்களும், மதிப்பவர்களும் கைகோர்ப்போம்.
 
ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
நாள் : 5-2-2016 மாலை 4 30 மணி 
இடம்: வள்ளுவர்கோட்டம் சென்னை 

Leave a Response