
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. அந்த வகையில் பெங்களுருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார்.இந்த வாகனம் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று சசிகலாவை வரவேற்றனர்.
பெங்களுருவில் ஓய்வெடுக்கும் சசிகலா, வரும் பிப்ரவரி 3 அல்லது 5 ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியைப் பயன்படுத்த முடியும், இது சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறியுள்ளார்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார். மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று சசிகலாவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பெங்களூரு பகுதியான தேவனஹள்ளி அருகே கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தாங்கினார். பண்ணை வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தமிழகம் திரும்ப சசிகலா திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் சசிகலா காரில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி குறித்து டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்தான். அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்பதால் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் இருக்கிறது. சட்டப்போராட்டம் தொடரும். சசிகலாவை ஒரு வாரம் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
புகைப்படம் நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்


