ரஜினிக்கு சீமான் பதிலடி

நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி ட்விட் போட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் பாரதிராஜாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது சீமான் கூறியதாவது…

காவல்துறையினர்தான் தாக்கினார்கள். வெற்றிமாறன் மீது எதற்கு தாக்குதல் நடத்த வேண்டும். இயக்குநர் களஞ்சியம் மருத்துவமனையில் இருக்கிறார்.

100, 150 பேருக்கு மேல் தாக்கப்பட்டனர்.காவல்துறையினர், நீங்கள் எங்களுடன் ஒத்துழையுங்கள் என்கிறார்கள். அமைதியாகத்தான் போகிறோம். அப்போது தாக்குகிறார்கள். அப்போது நான் போன பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார்கள். நான் அங்கு போய் தடுத்து நிறுத்தினேன். அதை முழுதும் போடாமல் நான் அங்கு சென்றதை வைத்து மட்டும் போட்டு சொல்வது சரியா?

ரஜினிகாந்துக்கு நாங்கள் சொல்வது, நாங்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறோம், உங்களை மாதிரி மவுனப்போராட்டம் நடத்தியவர் கருத்துக்கூற வேண்டியது இல்லை. காவிரி பற்றி உங்களுக்கு என்னவென்றே தெரியவில்லை.

கால் ஏக்கர், அரை ஏக்கர், முழு ஏக்கர்னு சொல்கிறீர்கள். உங்களுக்கு காவிரி பிரச்சினை பற்றி என்ன தெரியும். பல மாவட்டங்களுக்கு குடிக்க நீர் இல்லை. உங்களுக்கு போரடித்தால் இமயமலைக்கு செல்லுங்கள், இங்கே வந்து ட்விட் போட்டு காமெடி செய்யக்கூடாது.

ஆந்திராவில் 20 அப்பாவித் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றபோது இவர் எங்கே போனார் இவர். சில நாட்களுக்கு முன் திருச்சியில் உஷா என்ற பெண் கணவனுடன் செல்லும் போது காவல் அதிகாரியால் எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்தார் அது பற்றிக் கருத்து கேட்ட போது கையெடுத்து கும்பிட்டு விட்டு நழுவிச் சென்றீர்களே அப்போது எங்கே போனது உங்கள் குரல்.

இவ்வாறு சீமான் கேள்வியெழுப்பினார்.

Leave a Response