தமிழில் தயாராகிறது ஜாக்கி சானின் ‘கராத்தே கிட்’ .


ஜாக்கி சான் நடித்த ‘கராத்தே கிட்’ படத்தை தமிழில் ‘கராத்தேகாரன்’.
என்கிற பெயரில் எடுக்கிறார்கள். பல படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குனராகப் பணியாற்றிய ‘ஸ்டன்’ சிவா, இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை அவருடைய மனைவியான லானி ஹு தயாரிக்க, அவருடைய மகன்கள் கெவின், ஸ்டீவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லானி ஹு ஜாக்கி சான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் நந்தா பெரியசாமி, ரோகிணி, அந்தோணிதாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையைமப்பாளர்களிடம் கிடாரிஸ்ட்டாகப் பணியாற்றி கெபா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மதன்கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார்

‘கராத்தே கிட்’ படத்தைப் பார்த்த போதுதான் இம்மாதிரியான ஒரு படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற திட்டம் ஸ்டன் சிவாவுக்கும், அவர் மனைவி லானிக்கும் வந்ததாம். உடனே, அதே மாதிரியான ஒரு கதையை எழுதும்படி மனைவி லானியிடம் கேட்டிருக்கிறார். அப்போதே இந்தப் படத்தின் கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்கிறார் கராத்தே வீராங்கனையான லானி ஹு. படத்தில் சிறுவனாக நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் ஏழையாக வைத்திருக்கிறார்கள்.அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் காட்சிகள் திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன் செல்லும்படி உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Leave a Response