வழக்கில் இருந்து விடுபட சபரிமலை ஐயப்பனை தரிசித்த திலீப்..!


கடந்த பிப்ரவரி மாதம் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த மலையாள நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.. இதனால் இந்த வழக்கில் இருந்து விடுபட வேண்டி சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்திருக்கிறார்.

Leave a Response