
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார்.
இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.
இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பிறகு ஓவியா நடிக்கவிருக்கும் புதியபடம் என்பதால் இப்படம் கவனம் பெற்றிருக்கிறது.


