மனிதகுலம் சகிக்கமுடியாத கொலை- கௌரி படுகொலைக்கு தீபச்செல்வன் கண்டனம்


இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டடார் பத்திரிகையாளர் கௌரி. இதற்கு இந்திய ஒன்றியமெங்கும் கடும் கண்டனங்களும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில் காங்கிரசு ஆட்சி என்பதால் கௌரியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஈழத்திலிருந்து எழுத்தாளர், பத்திரிகையாளர் தீபச்செல்வன், கௌரி கொலைக்குக். கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பு..
படுகொலை செய்யப்பட்ட, கன்னட எழுத்தாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஈழப் போராட்டத்தை ஆதரித்தவர் என்று மே17 இயக்கம் தன் அஞ்சலிக் குறிப்பில் கூறியுள்ளது. ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்ந்த எவரும் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பர். இந்துத்துவ கடும் போக்கு வாதத்தை எதிர்த்து வந்த கவுரி லங்கேஸ், ஈழத்தில் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் கொல்லப்படும் பாணியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமாராக மோடி பதவியேற்றபோது, “மோடி இந்தியாவின் ராஜபக்சே” என்று மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சே சும்மாவா கூறினார்? தனிமையில் இருந்த ஒரு பெண்ணை நான்கு கொலையாளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மனித குலம் சகிக்க முடியாத கொலை. கவுரி லங்கேஷின் படுகொலைக்கு நீதி வேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தி பெறட்டும்.

Leave a Response