
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் காயத்ரி.போகும்போது கமலுடன் கலந்துரையாடினார். அப்போது கமல், “காயத்ரி, நீங்கள் மட்டுமல்ல, பலரும் கெட்ட வார்த்தை பேசுவார்கள். நாம் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் உங்களிடம் நான் பாரபட்சமாக இருப்பதாக சிலர் சொல்கின்றனர். எனக்கென சாதி இருக்கிறதா? சாதியம் என்பது குரூரமான வார்த்தை” என்று தெரிவித்தார்.
இதற்கு மக்களிடமும் தனது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருவதாக காயத்ரி ரகுராம் பேசினார். மேலும், “நான் எல்லோரையும் எனது குடும்ப உறுப்பினர்களைப் போலத்தான் நினைத்து நடத்தினேன். யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை விட்டு கிளம்பும் முன்பு கமலுடன் நடனமாடி விட்டு கிளம்பினார் காயத்ரி ரகுராம். அவர் வெளியேறியவுடன், பிக் பாஸ் ரசிகர்கள் குறித்து கமல்ஹாசன், “எனக்கு மற்ற பிக் பாஸ் பதிப்புகளைப் பற்றி தெரியாது. ஆனால் இன்று, ரசிகர்களாகிய நீங்கள் கண்ணியமாக கேள்வி கேட்பதற்கு எடுத்துக்காட்டாகி விட்டீர்கள். நீங்கள் மோசமாக கேள்வி கேட்டிருந்தால், காயத்ரி, உலகம் இன்னும் குரூரமானதுதான் என்று நினைத்து தனது அணுகுமுறையை மாற்றியிருக்க மாட்டார். பிக் பாஸின் ஒவ்வொரு பகுதியும் எனக்கு வாழ்க்கைப் பாடமாக இருந்தது. போட்டியாளர்களிடமிருந்து நான் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவமானப்படுத்த நினைக்கும் நம் மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். நாட்டை ஆள்கிறவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியவில்லையாம், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரைத் திருத்தி, அவமானப்படுத்துவதில் என்ன பயன்?
இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
பார்ப்பனர் ஒருவருக்கு சங்கடம் என்றதும் கமலும் சின்மயியும் பொங்குகிறார்கள்


