பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு கவிழ்கிறது

மோடியின் உத்தரவையொட்டி நேற்று (ஆகஸ்ட் 21) எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர்.அதன் உடனடி விளைவாக, இன்று (ஆகஸ்ட் 22) டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவைத் திரும்பப்பெறுவதாகக் கடிதம் அளித்தனர். இதனால் தமிழக அரசு பெரும்பானமையை இழந்துவிட்டது.

இன்று ஆளுநரைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்கள்…

1.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி),
2.தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி),
3.பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி),
4.எம்.ரங்கசாமி (தஞ்சாவூர்),
5.எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்),
6.எஸ்.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை),
7.எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்),
8.ஆர்.சுந்தர்ராஜ் (ஒட்டப்பிடாரம்),
9.ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை),
10.கே.கதிர்காமு (பெரியகுளம்),
11.பி.வெற்றிவேல் (பெரம்பூர்),
12.எஸ்.முத்தையா (பரமக்குடி),
13.டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி),
14.எம்.கோதண்டபாணி (திருப்போரூர்),
15.ஆர்.முருகன் (அரூர்),
16.ஆர்.பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்),
17.ஜெயந்தி (குடியாத்தம்),
18.என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்),
19.விளாத்திக்குளம் உமா மகேஸ்வரி

ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

தமிழகத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் – 234
காலியிடம் 1 (ஜெ. மறைந்ததால் ஆர்.கே.நகர் காலியாக உள்ளது)

திமுக 98
அதிமுக அணி 135
எடப்பாடி ஆதரவு 113
டிடிவி ஆதரவு 19
கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு 3

பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

இப்போது எடப்பாடி அரசு பெரும்பானமையை இழந்திருப்பதால் அரசியல் சட்டப்படி எந்நேரமும் ஆட்சி கவிழும் வாய்ப்பு உருவாகிவிட்டது.

Leave a Response