
குட்டிப்புலி படஇயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கொம்பன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. ஸ்டுடியோகிரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக இலட்சுமிமேனன் நடித்திருக்கிறார். இலட்சுமிமேனனின் அப்பாவாக படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார் ராஜ்கிரண். இவர்களோடு கருணாஸ், தம்பிராமய்யா, கோவைசரளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் தனிக்கொடி மகாலிங்கம் ஆகிய இரண்டு புதியபாடலாசிரியர்களை இந்தப்படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்மணத்தோடு தயாராகியிருக்கும் இந்தப்படம், மாமனார் மருமகனுக்கிடையே நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களை எதார்த்தமாகச் சொல்கிற படமாம். சின்னவயதில் என் அப்பாவுக்கும் அம்மாவின்அப்பாவான தாத்தாவுக்கும் இடையே நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தியே இந்தப்படத்தின் கதையை எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறார் இயக்குநர் முத்தையா.
பருத்திவீரனுக்குப் பிறகு கிராமத்துப்படங்களையே தவிர்த்து வந்த நான், இந்தப்படத்தின் கதையைக் கேட்டு இதைத் தவறவிடவேண்டாம் என்பதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று சொல்கிறார் நாயகன் கார்த்தி.
பாடல்கள் வெளியீட்டுவிழாவுக்கு நாயகி இலட்சுமிமேனன் வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, இன்றைக்கு பனிரெண்டாம்வகுப்புத் தேர்வுகள் தொடங்கியிருக்கின்றன. அவர் தேர்வெழுதப் போகிறேன் என்று சொன்னார். அவர் படிப்பைக் கெடுக்கவேண்டாம் என்பதற்காக இந்த விழாவுக்கு வரச்சொல்லிக்கட்டாயப்படுத்தவில்லை என்றார் இயக்குநர் முத்தையா. நம்பிட்டோம்.
