
ஆரவ்விடம் ஓவியா பேசியதன் மறுவாசிப்பு என்று இதைச் சொல்லலாமா?
எனக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு வரக் காரணமென்ன தெரியுமா ஆர்வ்?
காயத்ரி, ஜூலி, ரைசா எல்லாருமே என்னை ஒதுக்கித் தள்ளினப்போ நீ என்மேல காட்டின பரிவு, அதை நட்பு, காதல்னெல்லாம் சொல்ல மாட்டேன், பரிவு தான்… அது தான் எனக்கு முதல்ல உன்னை புடிக்க காரணம்.
இந்த ஸ்னேகன் கூட என்னை தங்கச்சின்னு சொல்லி தடவுறதெல்லாம் காம உணர்வோட தான்னும் எனக்கு புரியாம இல்ல! ஆனா அதுக்கு எதிர்வினை ஆற்றினேன்னா ரணகளம் ஆயிருமேன்னு ஒரு பதட்டம். அதான் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சுகிட்டிருக்கேன். எந்த ஒரு இந்திய குறிப்பா தமிழக ஆணுக்கும் பெண்ணுடன் ஒரு தூய்மையான நட்பு ஏற்பட வழியே இல்ல! அதுக்கு காரணம் நம் சமூக கட்டமைப்பு, வளர்ப்பு முறை.
ஆனா நீ என்னை முத்தமிட்டு ஆறுதல் சொன்னப்போ உன் அணைப்பு, எனக்குள் தோற்றுவித்த வெப்பம், எனக்கு ரொம்பவே புடிச்சுது. உணர்வுபூர்வமா நான் உன்னை என் இணையா நினைக்கத் தொடங்கியது அப்போ தான். ஆனா நீ? கேவலம் சமூகம் என்ன சொல்லுமோன்னு பயந்துகிட்டு இப்ப என்னையே ஒதுக்குற, நீ ஒதுங்கி போறது மாதிரி சீன் போடுற.
இந்த சமூகம் என்னை காமத்துக்காக அலையிற பெண்ணா பார்க்குதுன்னா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீ, நீ மட்டும் தான் ஆரவ்! நீ ஒரு cheater. என் உணர்வுகளை வச்சு விளையாடுற நீ ஒரு கேடுகெட்ட கயவன்.
இதெல்லாம் புரிஞ்சிருந்தும் நான் உன்னையே சுற்றி சுற்றி வரக் காரணம் என்ன தெரியுமா ஆரவ்? என் வெறி! உன்னை எப்படியாவது வீழ்த்திரணும். உன்னை முழுசா அடைஞ்சிரணும்ங்கிற தீராத மோகம் தான். இதை காதல்னு சொல்லி இந்த சமூகம் பார்க்கணும், என்மேல பரிதாபப் பட்டு என்னை ஜெயிக்க வைக்கணும் என்கிறதுக்காக தான் என் கன்னத்துல அப்பப்போ கண்ணீரை வழிய விடுறேன்.
அந்த முட்டாள்களும் அதையெல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு என் பக்கம் நிக்கிறாங்க! என் உணர்வுகளுக்கு நீ செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது ஆரவ்! ஆனா தாய்மை உணர்வுங்கிற முகமூடிய போட்டுகிட்டு உன்னை மன்னிச்சது மாதிரி நடிச்சு, அதுல ஜெயிக்கவும் செஞ்சேன் பாரு, அதான் என் திறமை.
நீ வடிச்ச நீலிக் கண்ணீரை நான் நம்பிட்டேன்னு நினைச்சியா? ஹிஹி அங்க தான் என் வன்மமே இருக்கு. நீயும் நானும் பிரிஞ்சிட்டோம்னு தெரிஞ்சதும் இந்த ஊரே கைகொட்டி சிரிச்சுது பார்த்தியா, அந்த சிரிப்பை நிறுத்துறதுக்காக மட்டும் தான் மன்னிப்புங்கிற அந்த நாடகத்தை அரங்கேற்றினேன். அதை ஒரு கட்டத்துல உனக்கும் புரிய வச்சிட்டேங்கிற அளவில எனக்கு மகிழ்ச்சி. நான் உன்னை மாதிரி துரோகி இல்ல ஆரவ்.
ஆனா, இப்ப நீ செய்யிற உதாசீனம் என்னை வெறியாக்குது ஆரவ். உன்னை அப்டியே கண்டந்துண்டமா வெட்டி போட்டிரணும்னு கூட சமயத்துல தோணுது. ஆனா கண்டிப்பா நான் அதை வெளிய காட்டிக்க மாட்டேன். உன்னை உருகி உருகி காதலிக்கிறமாதிரி தான் கடைசி வரைக்கும் நடிக்கப்போறேன். உன்னை என்னிக்கு நான் முழுசா அடையிறேனோ, அன்னிக்கு உனக்கு உணர்த்துவேன் ஆரவ், வலின்னா என்னன்னு!
-அகல்விழி கயமலர்க்கண்ணி


