இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்துவெறியர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு அக்கூட்டம் செய்த செயலால் இந்தியாவே கதறுகிறது. நெஞ்சில் நெருப்பும் உள்ளத்தில் தகிப்பும் கொண்டு இந்தியாவின் ஆன்மா அலறுகிறது. இந்திய ஒன்றியமெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வெளிநாடுகளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள அச்செயலைக் கண்டு மனம் நொந்த வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப்பெண் எழுதியிருக்கும் பதிவில்,

*பாரதப் பண்பாடு*
ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒரு கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.. அதற்கு அந்த காதலர்கள் தங்கள் ஜாதியினை சொல்கிறார்கள்.
உடனே அந்தக் கும்பல் அந்த காதலர்களின் உடைகளை முழுமையாக களைகிறார்கள்.. காலணிகளையும் கழட்டச் சொல்கிறார்கள்.. அவர்கள் இருவரும் முழு நிர்வாணம் ஆகிறார்கள்.. சுட்டெரித்து கொளுத்தும் வெயில்!!!
பிறகு நிர்வாணமான இருவரையும் அந்தக் கும்பல் கம்பு மற்றும் தடியால் பலமாக தாக்குகிறார்கள்.. கூட்டத்தில் சிலர் தாரை, தப்பட்டை அடித்து உற்சாகம் அளிக்கிறார்கள், கோஷம் எழுப்புகிறார்கள்..
பிறகு,
காதலனை அந்த முழு நிர்வாணப் பெண்ணை துக்கி தோளில் வைத்து நடக்கச் சொல்கிறார்கள், அவனும் நடக்கிறான், ஒரு கும்பலுக்கு நடுவே தன் முழு நிர்வாண காதலியை சுமந்து தானும் நிர்வாணமாய் கொளுத்தும் வெயிலில் நடக்கும் அவனை அந்த கும்பல் கம்புகளால் கோஷம் எழுப்பியபடி தாக்குகிறார்கள்.
தன் காதலியை சுமந்த அவனை அவனுடைய ஆணுறுப்பில் கம்பினை வைத்து தாக்குகிறார்கள், அவளையும் விடவில்லை, அவளது பெண்ணுறுப்பிலும் தாக்குகிறார்கள்.
அவள் முதலில் அவமானம் மற்றும் வலியால் கதறுகிறாள்..பின்னர் மரத்து போன மன நிலையை அடைகிறாள். தன் நிர்வாணத்தை மறைக்க அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் அவனை சுமக்க சொல்கிறார்கள்.. அவளும் தன்னுடைய முழு நிர்வாண காதலனை தனது தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறாள்.. அப்போது அந்தக் கும்பல் அவளுடைய முழு நிர்வாண உடலில் தாக்குகிறார்கள்..
சிறிது தூரம் தூக்கி சென்று பின்பு சுருண்டு விழுந்துவிடுகிறாள்.. கீழே விழுந்த அவர்களை அந்த கும்பல் மீண்டும் கொடூரமாக தாக்குகிறது.. தாரை, தப்பட்டை அடிக்கிறார்கள், கோஷம் எழுப்பி ஆனந்தம் கொள்கிறார்கள்..
இந்த முழு சம்பவத்தையும் அதே கூட்டத்தில் இருந்த சிலர் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு விடுகிறார்கள்!!!
சம்பவம் நடந்த இடம்:-
Bharatiya Janata Party (BJP) கட்சியின் Yogi Adityanath ஆளும் உபி யில்
நடந்த நாள்:- 28/07/2017
அவர்கள் தாக்கபட்ட காரணம்:- தலித்துகளாய் பிறந்தது
தாக்கிய கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!
நமக்கான பாடம்:- பாரத பண்பாடு & கலாச்சாரம் கட்டிக் காப்போமாக!
இந்தியாவில் பிறந்ததற்காய் நான் வெட்கப்படுவதற்கான மற்றொரு காரணம் இது தான்! This bloody fucking hypocricy!
இந்த நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிகளுக்கு பாதுகாப்பும், மனிதர்களுக்கு நிர்வாணமும் வாழ்வுரிமையாய் கொடுத்துக் கொண்டே, தங்கள் கலாச்சார பெருமை பேசித்திரியும் மாக்கள் வாழும், ஆட்சி செய்யும் தேசம் அது! அநியாயங்கள் கண்முன்னே நடக்கும் போதும் எதிர்வினை ஆற்றாமல் வேடிக்கை பார்க்கும், கண்மூடி கடந்து போகும் விசித்திர உயிரிகள் வாழும் தேசமது! எதிர்த்து போராடும் திராணி இழந்து போன புழுக்கள் நெழியும் உன்னத தேசமது!
கையறு நிலையில் இப்படி பதிவுகள் மட்டும் எழுதிக் கொண்டு வெறுமையை வெறித்துக் கொண்டு பலரும் என்னைப் போல இங்கு….
மரத்துப் போன அந்த நிர்வாணப் பெண்ணின் முகம் என் மனக்கண் முன் வந்து போவதையும் என் கண்கள் பனிப்பதையும் தவிர்க்க முடியவில்லை!
ஜெய்ஹிந்த்!
Lulu Deva Jamla
31/07/2017

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response