
பா.ரஞ்சித் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. சமுத்திரக்கனி ரஜினியின் வலது கையாக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, நானா படேகர், சம்பத், அரவிந்த் ஆகாஷ் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது..
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் ‘வத்திக்குச்சி’ என்கிற படத்தில் நடித்து, அதன்பின் நீண்ட நாட்களாகவே என்ன ஆனார் என தெரியாமல் இருந்த திலீபன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதிலும் ரஜினியின் மகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


