அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகும் ஆர்.கே.சுரேஷ்..!


இயக்குனர் பாலாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள் சோடைபோனதாக வரலாறு இல்லை.. அந்தவகையில் தான் இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை வில்லனாக்கினார் பாலா. அதை தொடர்ந்து ‘மருது’ படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும் நடித்தார் ஆர்.கே.சுரேஷ்..

வில்லனுக்கு அடுத்தபடியான புரமோஷன் ஹீரோ தானே..? ‘வேட்டை நாய்’ என்கிற படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான சுரேஷ், தற்போது ‘பில்லா பாண்டி’, ‘தென்னாட்டான்’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.. இந்தப்படங்களில் தனக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் தனது பாதையை தீர்மானிக்க போகிறாராம் ஆர்.கே.சுரேஷ்.

Leave a Response