
புரட்சிகரமான இயக்குனர் என்று அழைக்கப்படும் விதமாக் படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலுபிரபாகரன்.. இவர் இயக்கத்தில் உருவான ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்கிற படம் வெளியானது. இந்தநிலையில் 60 வயதான இவர் இன்று தனது வயதில் பாதி வயதுடைய நடிகையை இன்று பத்திரிகையாளர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர் திருமணம் செய்துகொண்டது 35 வயது நடிகை ஷெர்லிதாஸ் என்கிற நடிகையைத்தான். வேலு பிரபாகரன் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷெர்லி. இந்தப் படத்திற்குப் பின்னர் வேலுபிரபாகரனுக்கு உதவியாளராக ஷெர்லி இருந்து வந்துள்ளார்.. இந்த நட்பு இன்று திருமண உறவாக மலர்ந்துள்ளது.


