பந்தா இல்லாமல் எளிமையை பின்பற்றும் ரஜினி-ரஞ்சித் கூட்டணி..!


ரஜினி படம் என்றாலே தானாகவே எதிர்பார்ப்பு உருவாகி விடும்.. தற்போது தயாராகி வரும் ‘காலா’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆனால் இதற்கு மேலும் மற்ற நடிகர்களின் படங்களைப்போல படம் முடியும் வரை டைட்டில் அறிவிக்காமல், படத்தின் புகைப்படங்களையோ, போஸ்டர்களையோ வெளியிடாமல் மூடி மூடி வைத்து தேவையில்லாமல் டென்சன் பண்ணும் வேலையை ரஜினியும் விரும்பவில்லை.. இயக்குனர் பா.ரஞ்சித்தும் விரும்பவில்லை..

இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற முழு நட்சத்திர பட்டியலையும் ஆரம்பத்திலேயே கொடுத்து விட்டார்கள். ஷூட்டிங் போவதற்கு முன்பே டைட்டிலையும் அறிவித்துவிட்டார்கள்.. பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு விட்டார்கள்.

இதோ, ஷூட்டிங் ஆரம்பித்த அன்றைய தினமே படப்படிப்பு தளத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை யாரும் திருட்டுத்தனமாக லீக் பண்ணுவதற்கு வாய்ப்பு தராமல் தாங்களே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்..

எந்த ஒரு இடத்திலும் தங்களது படத்திற்கான பந்தா, படாடோபம் எதையும் காட்டாத ரஞ்சித்திடம் வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் இன்றைய இயக்குனர்கள் பலர் பாடம் படிக்கவேண்டும்.

Leave a Response