
கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்சினிமா சில காரணங்களால் வடிவேலுவை ஒதுக்கிவைத்து விட்டது. சினிமா என்பதைவிட சினிமாக்காரர்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இடையில் ஒன்றிரண்டு படங்களில் அவர் ஹீரோவாக நடித்தாலும் மற்ற நடிகர்கள் யாரும் அவரை தனகளது படங்களில் சேர்த்துக்கொள்ளவில்லை..
அதன்பின் கடந்த வருடம் நடந்த நடிகர்சங்க தேர்தலில் என்ட்ரி கொடுத்து மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார் வடிவேலு.. அதன்பலனாக விஷாலுடன் ‘கத்திச்சண்டை’ படத்தில் காமெடியனாக நடிக்க இறங்கிவந்தார்.. இதெல்லாம் நமக்கு தெரிந்த கதைதான்.. ஆனாலும் வடிவேலு திரையுலகத்தினர் மீது உள்ள தனது கோபத்தை மறக்கவே இல்லை என்பதை இரண்டாம் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்..
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மகன் திருமணத்தை மதுரையில் நடத்திய வடிவேலு, அதற்கு திரையுலகத்தினர் யாரையும் அழைக்கவில்லை.. அதேபோல நேற்று அவரது இரண்டாம் மகள் திருமணம் மதுரையில் நடைபெற்றது.. ஆனால் இதில் பூச்சி முருகன் ஒருவரை தவிர யாரையும் அழைக்கவில்லை.
தனது குடும்பத்தை மீடியா மற்றும் வெளியுலகினரின் கண்களுக்கு காட்டாமலேயே கண்டிப்பான நடைமுறையை கடைபிடித்தவர்தான் கவுண்டமணி.. ஆனால் அவரது மகள் திருமணத்திற்கு திரையுலகத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து மரியாதை செய்தார். ஆனால் வடிவேலுவோ இந்த விஷயத்தில் கவுண்டமணியையும் மிஞ்சிவிட்டார் என்று சொல்லும்படிதான் இருக்கிறது.


