அவிநாசி அத்திக்கடவு திட்டம்- ஏமாற்றும் அதிமுக

அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்ற அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பேசியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவில் 25 விழுக்காட்டை ஒதுக்கி தமிழக சட்டமன்றத்தில் இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றினால்தான் திட்டம் நடைமுறைக்கு வருமென்று கொங்குநாடுசனநாயகக்கட்சி தெரிவித்திருக்கிறது. அதிமிக உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசியது வரவேற்புக்குரியது.ஆனால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு நிதி ஒதுக்காமல்,மத்திய அரசு நிதி ஒதுக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்தக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை…..

 அண்ணா தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மாநிலங்கள வையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்துள்ளார்.பவானி அணையின் 2 டி.எம்.சி  உபரிநீர் பயன்பாடு இல்லாமல் வீணாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் கோவை மாவட்டத்தின் காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர், திருப்பூர்,அவினாசி,ஈரோடு மாவட்டத்தின் பவானி சாகர்,அந்தியூர் ஆகிய பகுதிகளிலுள்ள  538 குளங்கள்,71 ஏரிகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தினால் 144 கிராமங்களைச் சார்ந்த 50இலட்சம் பேர் பயனடைவர். எனவே இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுநிதியான ரூ.1862 கோடியை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டுமென்று மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டதகவலின்படி இத்திட்டத்திற்கான நிதியில் 25% ஒதுக்கி திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி,மத்திய அரசுக்கு அனுப்பினால் மட்டுமே இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

எனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுமென நீலகிரி,திருப்பூர்,கோவை,ஈரோடு உள்ளிட்ட 24  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 எம்.பி.களுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கடிதம் அனுப்பியுள்ளது

Leave a Response