
மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு உள்ளிட்ட சில நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுந்தரபுத்தனின் அடுத்த நூல் அழகின்வரைபடங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்வெளி என்கிற புதிய பதிப்பகத்தின் புத்தம்புது வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் குறித்து நூலாசிரியர் சுந்தரபுத்தன் எழுதியுள்ள பதிவில்,
பேஸ்புக் குறிப்புகளை தொகுத்து நூலாக வெளியிடலாம் என்ற உற்சாகத்தை எனக்கு அளித்த நூல். அதற்கு என்ன தேவை இருக்கிறது என்று முதலில் அக்கறையுடன் நண்பர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆனாலும் மஞ்சள் பூக்களுக்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. என்னை அறிந்த, பழகிய நண்பர்கள் நூல் அறிமுக விழாவில் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இது அழகின் வரைபடங்கள்.
மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருவின் இரண்டாம் பாகம் என்று வைத்துக்கொள்ளலாம். உலகப் புகழ்பெற்ற புகைப்படங்கள், அதன் விவரங்கள். உள்ளூர் பயண அனுபவக் குறிப்புகள் அடங்கிய சிறு நூல்.
அழகிய லேஅவுட்டுடன் வெளியிடலாமே என்று அரும்பிய எண்ணத்தை வடிவமைப்புக் கலைஞர் ரவீந்திரனின் கைவண்ணத்தில் நிறைவேற்றினேன். கூட்டுதவியில் வந்திருக்கிற இந்த அழகின் வரைபடங்களுக்கு வண்ணமாகவும் தூரிகையாகவும் இருந்தவர்கள் – பெயர் வெளியிட விரும்பாத நண்பர் ஒருவர், பத்மஜா நாராயணன், வசந்திகலா.
சில நிமிட வாசிப்பில் முடிக்கக்கூடிய நூல்தான். ஆனால் உங்கள் மனதில் எழும் அலைகள் ஓயாது.
இது ஒரு தமிழ்வெளி வெளியீடு.
தொடர்புக்கு: 73580 16453 / tamizhveli2.2@gmail.com
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.


