பிரியங்காவுடன் ஜோடி சேர்ந்த பாலா


ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தை தயாரித்த ஜேஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’

படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி,பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ், எசி.ஜே.பாஸ்கர் என பலஇயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்டஅனுபவம் பெற்றவர்.

ஒளிப்பதிவு- இனியன் ஹரிஸ், இசை–அலிமிர்ஷா. இவர்,’ஆதார்’ ,சமுத்திரக்கனி நடிக்கும் ‘புத்தனின் சிரிப்பு’படங்களின் இசையமைப்பாளர்.
பொருட் செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத்தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்;பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும்படம்தான் ‘ரீங்காரம்’
இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப்பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாகவைத்து படம் உருவாகியிருக்கிறது.
படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால்ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார்தயாரிப்பாளர் ஜின்னா.விடுகதையைப்போல இதன்திரைக்கதையை உணர்ந்ததாகவும் விடைஅறியும்ஆர்வத்தை சுவாரஸ்யமான காட்சிகள் ஏற்படுத்தியதாகவும்அவர் கூறுகிறார்.
இது ‘ஒரு நாளில்’ நடக்கும் கதை. கதையின் விறுவிறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்றுபடத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான் . அதில் ஒன்றை’குட்டிப்புலி’ ‘அருவா மீச’ புகழ் பத்மலதா பாடியுள்ளார்.

பாலா என்கிற புது முகம் நாயகன். பிரியங்கா தான் நாயகி.கலாபவன் மணி, ‘ஆடுகளம்’ ஜெயபாலன் போன்றோரும்நடித்துள்ளனர்.
ஜெயபாலன் இருட்டில் வாழும் பூதமாக வித்தியாச வேடம்தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார்.விஜய்டிவிபுகழ் சிங்கப்பூர் தீபன் நகைச்சுவை நடிப்பில் சிரிக்கவைப்பார்

இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான்.ஆனால் கோணங்களில் வித்தியாசப் படுத்திக்காட்டியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறும் போது —
“மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்தஉணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில்தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்றுஅழுகை.

இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம்செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்தபுத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதைஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதைபுதுசு என்று சொல்லமாட்டேன்.” என்கிறார்.

கதை பற்றி …?

”எல்லாச் சொற்களும் சொல்லப் பட்டு விட்டன. சொல்கிறவாய்கள் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசுஎன்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோஉருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்றுஒன்று இருக்கும்வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்றுநினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப் படுத்தி கதைசொல்லியிருக்கிறேன். கதை புதிதாகத் தோன்றா விட்டாலும்என் கோணம்  புதிது.பார்வை  புதிது .அது நிச்சயம் ரசிக்கவைக்கும்..உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றிமட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ‘ரீங்காரம்’ .

படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி….?

“ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல்நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர்வேலையை சரியாகத் செய்து யதார்த்தத்துக்கு பலம்சேர்த்திருக்கிறார்.

தூக்க முடியாத பாத்திரத்தைக் கூட தூக்கிக்கொண்டுநடந்திடலாம் ஆனால் கனமான கதாபாத்திரத்தைதூக்கிக்கொண்டு நடப்பது சுலபமல்ல. பாரத்தை முகத்தில்காட்டாமல் பாத்திரத்தை சுமந்து  வாழ்ந்திருக்கிறார்கதாநாயகி’  பிரியங்கா. ‘கங்காரு’ பிரியங்காவான அவர்,இப்படத்துக்குப்பின்  இனி ‘ரீங்காரம் ‘பிரியங்காஆகிவிடுவார்.

எப்போதுமே எரியும் நெருப்பாக கலாபவன் மணி .அடக்கமாகநடித்து ஆளுமை காட்டி அசத்தியுள்ளார். குத்திக் கிழிக்கிறகத்தி மாதிரி ‘ஆடுகளம்.’ ஜெயபாலன். ‘பசங்க’ சிந்தியாஅம்மாவாக உயிர் கொடுத்துள்ளார்.’

இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துஇறுதிக் கட்டப்  படப்பிடிப்பில் இருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். புதியகதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள் ரீங்காரத்தையும்வரவேற்பார்கள்  என்று நம்பலாம்.

 

 

Leave a Response