மிஷ்கின் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் பிரசன்னா..!


ஹீரோவாக நடித்துவந்த பிரசன்னாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையாதிருந்த நிலையில் அவரை தான் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலமாக வில்லனாக மாற்றி, ரசிகர்களையும் திரையுலகத்தையும் ஆச்சரயப்பட வைத்தவர் இயக்குனர் மிஷ்கின்.. சொல்லப்போனால் அந்தப்படத்தில் இருந்துதான் பிரசன்னாவின் மீதிருந்த அமுல் பேபி இமேஜ் கொஞ்சம் மாறியது.

இப்போது பிரசன்னாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் மீண்டும் மிஷ்கின் மூலம் ஓர் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.. ஆம்.. விஷாலை வைத்து தான் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க மீண்டும் பிரசன்னாவை அழைத்திருக்கிறார் மிஷ்கின். தனக்கு ஒரு லைப் டைம் கேரக்டர் தந்த இயக்குனர் மிஷ்கின், இந்தப்படம் மூலம் தனக்கு மீண்டும் ஒருமுறை லைப் தருவார் என மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் பிரசன்னா.

Leave a Response