தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வருவார் ஓபிஎஸ் – டிடிவி தகவல்

சென்​னை​யில் போ​ராடி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை நேற்று சந்​தித்து, அமமுக பொதுச்​ செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது….

தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்கையை உறு​தி​யாக அரசு நிறைவேற்ற வேண்​டும். அவர்​களை மீண்​டும் பழைய முறைப்​படி பணியமர்த்த வேண்​டும். திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​விட்டு இப்​போது அவர்​களது
போராட்​டத்தை எப்​படி​யா​வது தடுக்க முயல்​கிறார்​கள். முதலமைச்சர் நேரடி​யாக வந்து பேச வேண்​டும்.

யாருக்குத் தோல்வி முகம் என்​பதை வரும் தேர்​தலில் மக்​கள் காட்​டு​வார்​கள்.தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் நான் இணை​யக் காரணமே திமுகவை வீழ்த்த வேண்​டும் என்​பது​தான். முன்​னாள் முதலமைச்சர் எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து திரு​மாவளவன் பேசியிருப்​பது, அவர் குழப்​பத்​தில் இருப்​பதைக் காட்​டு​கிறது. மறைந்த
தலை​வர்​கள் பற்றிப் பேசும்​போது கவன​மாகப் பேசவேண்​டும்.

முன்​னாள் முதலமைச்சர் ஓ.பன்​னீர்​செல்​வம் மீண்​டும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு வரு​வார் என நம்​பு​கிறேன்.
பன்​னீர்​ செல்​வத்தை டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​வர்​கள்​தான் சமா​தானப்​படுத்த வேண்​டும். பாஜக தேசிய பொதுச்​செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் அழைத்​த​தாக​வும் நான் அவரைச் சந்​திக்க மறுத்​த​தாகச் சொல்​லப்​படும் செய்தி
உண்​மை​யில்லை எனவும் பன்​னீர் ​செல்​வம் என்​னிடம் சொன்​னார்.

இவ்​வாறு டிடிவி.தினகரன் தெரி​வித்​தார்​.

Leave a Response