இராமதாசு அன்புமணி சமரசம் – உடன்பாடுகள் என்னென்ன?

பாமகவில் கடந்த சில மாதங்களாக நீடித்த குடும்ப மோதல் முடிவுக்கு வரவுள்ளது. குடும்பத்துக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, எதிர்காலச் சூழலைக் கருத்தில் கொண்டுதான் பேரன் முகுந்தனை கட்சிக்குள் இராமதாசு நுழைத்தார்.இது பிடிக்காமல் அன்புமணி எதிர்த்ததே இருவரின் மோதல் அதிகரிக்கக் காரணம்.

இப்போது அந்தச் சிக்கலுக்கு அனைவரும் கலந்து பேசி தீர்வு கண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதன்படி, அன்புமணிக்கே மீண்டும் தலைவர் பதவியை வழங்கவும் தனக்கு பலமாக இருக்கும் வன்னியர் சங்கத்துக்கு பேரன் முகுந்தனை தலைவராக்கி விடவும் இராமதாசு முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கட்சியை மகனும், வன்னியர் சங்கத்தை பேரனும் வழி நடத்தட்டும் என்கிற தகவலை, ஜி.கே.மணி மூலம் சொல்லியனுப்பினாராம் மருத்துவர். அதற்கு அன்புமணியும் சம்மதம் சொல்லி இருக்கிறாராம்.

வன்னியர் சங்கம் மூலமாக சொத்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனால் தற்போதைய தலைவர் அருள்மொழியை நீக்கிவிட்டு முகுந்தனை நியமிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் முகுந்தன் இப்போது இருக்கும் இளைஞர் சங்கத்துக்கு அன்புமணியின் மனைவி சவுமியாவை நியமிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், வருகிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சவுமியா போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்கிற அன்புமணியின் கோரிக்கையையும் இராமதாசு ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.விரைவில் பாமக தரப்பிலிருந்து இவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு.

Leave a Response