
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.கவைச் சேர்ந்த அன்புமணி இராமதாசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 சமஉக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் திமுக கூட்டணிக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக கூட்டணிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்,2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலியொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்திக் கொண்டிருக்கின்றன்.இந்நிலையில் இப்போது இந்தத் தேர்தல் அறிவித்திருப்பதால் கூட்டணிக் கணக்குகள் விரைவாகும் என்று சொல்லப்படுகிறது.


