எடப்பாடி இல்லாத அதிமுக – டிடிவி தினகரன் கருத்தால் பரபரப்பு

தேனி மாவட்டம், சின்னமனூரில் நேற்று நடந்த அமமுக ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது,,,,

23 ஆம் புலிகேசி, மன்னராக இருந்தது போல தான் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார். இவரையும் ஒரு புலிகேசியாகத் தான் பார்க்கிறேன்.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறு உருவம் கிடையாது. சில பேர் சுயலாபத்திற்காக அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஓ.பி.எஸ் முதலமைச்சரானதற்கு பின்பு ஜெயலலிதா நினைவிடத்தில் போய் மொட்டை போட்டு சசிகலா தான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும், பொதுச் செயலாளராக வேண்டும் என்று டிராமா பண்ணியது யார்? அரசியலில் ஒரு பெரிய காமெடி நடிகர் உதயகுமார்.

அதிமுக ஒன்றிணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தான் நல்லது.பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். பழனிச்சாமி என்ற சுயநல மனிதர் எல்லோரும் ஒன்றிணைவதற்கு தடையாக இருக்கிறார்’ என்றார்.

தொடர்ந்து, ‘எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், “அரசியலில் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உண்டு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடியின் இதே நிலை தொடர்ந்தால் அதன் பிறகு அதிமுக இழுத்து பூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு உண்டு என டிடிவி.தினகரன் கூறியிருப்பது ஏற்கெனவே உலவி வரும் பல்வேறு யூகங்களுக்கு வலுச் சேர்ப்பது போல் அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response