18 ஆவது மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யவிருக்கிறார்.
அவருடைய பயண விவரம்….
மார்ச் 22 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர்,
மார்ச் 23-ஆம் தேதி தஞ்சை, நாகை
மார்ச் 25 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி
மார்ச் 26 ஆம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம்
மார்ச் 27 ஆம் தேதி தென்காசி, விருதுநகர்
மார்ச் 29 ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி
மார்ச் 30 ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி
மார்ச் 31 ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர்
ஏப்ரல் 2 ஆம் தேதி வேலூர், அரக்கோணம்
ஏப்ரல் 3 ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி
ஏப்ரல் 5 ஆம் தேதி கடலூர், விழுப்புரம்
ஏப்ரல் 6 ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை
ஏப்ரல் 7 ஆம் தேதி புதுச்சேரி
ஏப்ரல் 9 ஆம் தேதி மதுரை, சிவகங்கை
ஏப்ரல் 10 ஆம் தேதி தேனி, திண்டுக்கல்
ஏப்ரல் 12 ஆம் தேதி திருப்பூர், நீலகிரி
ஏப்ரல் 13 ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி
ஏப்ரல் 15 ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை
ஏப்ரல் 16 ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்
ஏப்ரல் 17 ஆம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை
இவ்வாறு அவருடைய பரப்புரைப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.