
சுந்தர் .சி இயக்கத்தில் அரண்மனை தந்த வெற்றி., அரண்மனை – 2க்கு அஸ்திவாரமிட்டு ஹன்சிகா, சுந்தர்.சி உள்ளிட்டோருடன் சித்தார்த் – த்ரிஷா, வைபவ் , சூரி, பூனம் பஜ்வா உள்ளிட்ட புதியவர்களை புதிதாக இணைத்துக் கொண்டு பிரமாண்டமான பேய் படமாக மிரட்டலாக வெளிவந்திருக்கிறது. கூடவே காமெடி படமாகவும் கலக்கலாக, கலர்புல்லாக வந்திருப்பது அரண்மனை – 2 வின் சிறப்பு!
‘அந்த ஊர் ஜமீன்தார் ராதாரவி., அவரது மூத்த மகன் சுப்புபஞ்சு, இளைய மகன் சித்தார்த்,. சித்தார்த்துக்கும் உறவுப்பெண் த்ரிஷாவுக்கும் திருமணம் பேசி முடித்து, அது நடக்க இருக்கும் சூழலில் ஜமீனுக்குள் ஆலமரத்தை காட்டிலும் பல மடங்கு உயர கெட்ட சக்தி புகுந்து, ஜமீன் ராதாரவியை படுத்த படுக்கையாக்குகிறது.
சித்தார்த்தை பண்ணாத கொலைக்காக லாக்-அப்பில் தள்ளுகிறது, சுப்புபஞ்சுவின் மகனை தண்ணீருக்குள் தள்ளி மூழ்கடிக்கிறது…. அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் ஜமீன் குடும்பத்தை., இப்பட இயக்குனரும், இப்படததின் நாயகி த்ரிஷாவின் அண்ணன் ரவியாக இப்படம் முழுக்க வருபவருமான சுந்தர்.சி எப்படி காபந்து செய்கிறார்? என்பது தான் அரண்மனை – 2 படத்தின் கதை.
சித்தார்த், த்ரிஷா, பேயாக ஹன்சிகா, வைபவ், சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சூரி, கோவைசரளா,சித்ரா லட்சுமணன், மனோபாலா, ராஜ் கபூர், சுப்புபஞ்சு, வினோதினி உள்ளிட்ட எல்லோரும் அவ்வளவு ஏன்? கிராபிக்ஸ் பேய் கூட பிரமாதமாக நடித்திருக்கிறது.
கடையில கழுத போட்டோ மாட்டினா யோகம் வரும்னு சொன்னாங்க அவசரத்துல கழுத போட்டோ கிடைக்கலை… அதான் எங்கப்பன் போட்டோ மாட்டிட்டேன்…, செட்டப் பண்ணலாமுன்னு பார்த்தா இந்த கெட்அப் கெடுத்துடுச்சே.., தேனே கையில் தானா வந்து விழும் போது நக்கிடணும்…. என்பது உள்ளிட்ட சூரியின் சிங்கிள், டபுள் மீனிங் டயலாக்குகள்… படத்திற்கு பலம்.
ஹிப் ஆப் தமிழாவின் இசையில் ‘குச்சிமிட்டாய் குருவிரொட்டி….’, ‘போறாடா அவ போறாடா.. என்னோட ஆசைய மண்ணுக்குள்ள வீசிப் புட்டு…’ என்பது உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம்!
யு.கே .செந்தில்குமாரின் ஒளிப்பதிவு க்ராபிக்ஸ், சி.ஜி உதவியில் மேலும் ஜொலிக்கிறது.
சுந்தர்.சி யின் எழுத்து, இயக்கத்தில் அரண்மனை – 2 வும் மிரட்டல்! வழக்கம் போலவே ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸின் வெற்றி கணிப்பு இந்த முறையும் தோற்கவில்லை.
.
மொத்தத்தில், அரண்மனை – 2 வும் செம மிரட்டல்ண்ணே!


