இன்றும் (பிப்ரவரி 19) உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது.

சென்னையில் பிப்ரவரி 15 அன்று பெட்ரோல், லிட்டர் 91.19 ரூபாய், டீசல் லிட்டர் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,பிப்ரவரி 16 அன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துலிட்டருக்கு 91.45 ரூபாய் எனவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து , லிட்டர் 84.77 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16 அன்று விலை மேலும் உயர்ந்தது. பெட்ரோல் விலை 23 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் 91.68 எனவும் டீசல் 84.01 ஆகவும் உள்ளது.

நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91.98 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 85.31 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.65 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Leave a Response