ராகுல்காந்தியை ஏமாற்றும் காங்கிரசார் – மூத்தவரின் வேதனை

தமிழகக் காங்கிரசுக் கட்சியின் மூத்தவரும் இலக்கியப்பேச்சாளருமான நெல்லை கண்ணன், தன்னுடைய முகநூலில் வெளீயிட்டிருக்கும் வேதனைப் பதிவு….

காங்கிரஸ் இயக்கம் தமிழ்நாட்டில் வளராததற்கான காரணங்களை டில்லிக்கு எழுதியுள்ளேன்
முக்கிய செய்தி எங்கள் நெல்லை மாநகர் மாவட்டத் தலைவரை திருநாவுக்கரசர் தேர்வுசெய்திருக்கின்றார்.
அவர் சொந்தத் தொகுதி இராமநாதபுரம் அவர் திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கின்றார்.
திருச்சியில் தகுதி உள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளனர்.

செல்லக்குமார் குமரி மாவட்டத்துக்காரர் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர். அங்கே நல்ல தகுதி உள்ள காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? இ.வி.கே.எஸ்ஸூம் அப்படியே. ஜெயக்குமாரும் அப்படியே. பிறகு காங்கிரஸ் எப்படி வளரும்?

மாணிக்கம் தாகூர் சிவகங்கைக்காரர். விருதுநகரில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர். தங்கை ஜோதிமணி ராகுலால் தேர்ந்த்டுக்கப்பட்டவர். அவர் தான் ராகுல் காந்தி ஆள் என்று தோரணை காட்டுகின்றார்.

சட்டப் பேரவைத் தேர்தலிலாவது திருச்சி வேலுசாமி செல்வப்பெருந்தகை தூத்துக்குடியில் ஏ.பி.சி.வி.சண்முகம் சென்னையில் பல காலம் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஹிதயத்துல்லா சூளை இராமலிங்கம் என ஒரு பெரிய பட்டியல் தமிழகத்தில் உள்ளது. புதிய பட்டியலை உருவாக்குங்கள். திமுகவிடம் வாங்குகின்ற தொகுதிகளை வெல்லப் பாருங்கள்.

என்னுடைய கடிதம் பெரிய தலைவர்கள் அனைவரையும் சென்று அடைந்து விட்டது.

இல்லையெனில் காங்கிரசைக் காப்பாற்ற இயலாது.என்னை நெல்லைக்கு வரும் போதெல்லாம் நேர்மையின் திருவுருவம் அண்ணாச்சி நல்லகண்ணு வந்து பார்த்துச் செல்வார். முத்தரசனும் அப்படியே. மார்க்சிஸ்ட் தோழர்களும் அப்படியே.

ஆனால் பல முறை நெல்லைவருகின்ற கே.எஸ்.அழகிரியால் என்னை வந்து பார்க்க முடியவேயில்லை. விடுதலைச் சிறுத்தை தம்பி ஆளூர் ஷாநவாஸ் வன்னியரசு இந்தியயூனியன் முஸ்லீம் தலைவர்கள் வருவார்கள் கே.எஸ் அழகிரி பெரியவர் வர மாட்டார்.

ராகுல் காந்தியை ஏமாற்றாதீர்கள் நிறுத்துங்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response