
தமிழில் வெளியாகிற செய்தித் தொலைக்காட்சிகளில் முதலிடத்தில் இருந்தது பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி. அதற்கடுத்த இடத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சி இருந்தது.
அடுத்தடுத்த இடங்களில் தந்தி, புதியதலைமுறை நியூஸ் 7 போன்றவை இடம்பெற்றுவந்தன.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பாலிமர் நியூசை பின்னுக்குத் தள்ளி சன் நியூஸ் முதலிடம் பிடித்திருக்கிறது.
இது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் எடூக்கப்பட்ட கணக்கு.
ஊரகப்பகுதிகளில் பாலிமர் முதலிடத்தில் இருக்கிறது.அதேசமயம், இரண்டாமிடத்தில் இருக்கும் சன் நியூஸ் புள்ளிக்கணக்கில் பாலிமருக்கு மிக அருகில் இருக்கிறது.
எனவே, விரைவில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் சன் நியூஸ் முதலிடம் பிடிக்கும் என்கிறார்கள்.
இதற்குக் காரணம், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி ஆளும் பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டுவருவதுதான் என்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக மீது மக்கள் எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் சான்று என்று சொல்கிறார்கள்.


