மதுரைக்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் (வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிcசாமி அறிவித்துள்ளார்.

இதன்படி மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழுமுடக்கம் நீட்டிக்கப்பட உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழு ஊரடங்குk காலத்தில் தீவிரமாகk கண்காணிக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளையுடன் முழு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் தமிழக அரசு இந்த நீட்டிப்புc செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Response