ஜூலை 6 முதல் சென்னைக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு

ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஆறாம்கட்ட ஊரடங்கில் சென்னை பெருநகர காவல் எல்லைகு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தனி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றில் வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னைக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.அது குறித்த அறிவிப்பில், சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
மேலும் தேநீர்க்கடைகள் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 6 மணி வரை இரவு 8 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படும் என்றும் வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response