பத்தாம் வகுப்புத் தேர்ச்சி – பழ.நெடுமாறன் கோரிக்கை

பத்தாம் வகுப்புத் தேர்ச்சியை பிற மாநில தமிழ் மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்நாடெங்கும் தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வை இரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறேன்.

பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நடத்தும் பள்ளிகள் தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றில் பயின்ற மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response