ஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு

கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் 4 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மகிந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பொருளாதார வீழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தாது, அது மன ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உளவியல் ரீதியாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஊரடங்கை நீட்டித்தால் மட்டும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்றும் கூறியுள்ளார். சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனந்த் மகிந்திராவின் இந்தக் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Response