வடமாநிலத்தவர்கள் கொலை செய்ய அஞ்சுவதில்லை – மேலும் ஓர் அதிர்ச்சி நிகழ்வு

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் 24 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த இருவர் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேரின் உடல்கள் மொத்தம் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

9 உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லாததால் முதலில் தற்கொலை எனக் கூறப்பட்டது. ஆனால் தொடர் விசாரணையில் அனைவரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் காணாமல் போன ஒரு பெண்ணின் கொலையை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களைக் கொன்றுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது…..

மசூத் (வயது48) மற்றும் அவரது மனைவி நிஷா 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலிருந்து வாரங்கல் கிராமத்தில் குடியேறினர். அவரது குடும்பத்தினர் அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

மசூத்-நிஷா குடும்பத்திற்கு பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிஷாவின் அக்கா மகள் ரபிகா என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி வாரங்கல் பகுதிக்கு வந்துள்ளார்.

சஞ்சய்க்கு உணவு சமைத்துக் கொடுக்க யாரும் இல்லை என்பதால், ரபிகா உணவு வழங்கி வந்துள்ளார். இதனிடையே ரபிகாவுக்கும் சஞ்சய்க்கும் காதல் மலர்ந்துள்ளது. ரபிகா தனது மூன்று பிள்ளைகளுடன் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று திட்டமிட்டுள்ளார்.சஞ்சயோ, ரபிக்காவின் 16 வயது மகள் மேல் கண் வைத்து அச்சிறுமியுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளான்.

இதை அறிந்து கொண்ட ரபிகா சஞ்சையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். எனவே மார்ச் 7 ஆம் தேதி ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரெயில் நிலையம் அழைத்துச் சென்றுள்ளான் சஞ்சய்.

ரெயிலில் பயணிக்கும் போது இரவில் மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரபிகாவைத் தூங்க வைத்து. அதிகாலை 3 மணி அளவில் துப்பட்டாவை எடுத்து ரபிகாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளான்.

பின் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரெயிலில் ஏறி வாரங்கலிற்கு வந்துள்ளான்.இந்நிலையில், சஞ்சய் திரும்பியதும், ரபிகா எங்கே என்று விசாரித்துள்ளார் நிஷா. அதற்கு பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகா சென்றுள்ளதாக சஞ்சய் தெரிவித்துள்ளான்.

ஆனால் நிஷாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர், மீண்டும் சஞ்சயிடம் உண்மையைக் கூறவில்லை என்றால் காவல்துறையில் புகார் தெரிவிப்பேன் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் மசூத் -நிஷாவின் தம்பதியின் மூத்த மகனுக்கு 21 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதை அறிந்து கொண்ட சஞ்சய் அதில், கலந்து கொண்டு அனைவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளான்.

அவன் திட்டமிட்டபடி,விருந்தின்போது தூக்கமாத்திரைகளைக் குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளான். அங்கு பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட 9 பேர் அந்தக் குளிர்பானங்களைக் குடித்து மயங்கியுள்ளனர்.

இரவு 12:30 மணிக்கு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில், சஞ்சய் தனியாளாக ஒவ்வொருவராக கோணிப் பையில் வைத்துக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளிக் கொலை செய்துள்ளான்.

சிசிடிவி கேமிரா காட்சி மூலம் இந்த நிகழ்வு தெரிந்துள்ளது. அதன் விளைவாக சஞ்சய் சிக்கி கொண்டான்.ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களிலிருந்து வருகிறவர்கள் மூலம் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்ளுக்கு வலுச் சேர்ர்கும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

Leave a Response