திமுக அமைப்புச் செயலாளர் திடீர் கைது

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை திடீரென கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல்துறை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக ஆர்.எஸ் பாரதியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response