விஜய்சேதுபதியுடன் உரையாடல் – கமல் சர்ச்சை கருத்து

கொரோனா கால ஓய்வால் நடிகர் விஜய் சேதுபதியுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார் கமல்ஹாசன். அந்தஉரையாடலில் ‘தேவர்மகன்’ படம் குறித்துப் பேசும்போது “தமிழர்களுக்குச் சாதிச் சண்டை பிடிக்கும்” என்றிருக்கிறார் ‘கமலாலய’ ஹாசன்.

தமிழர்களுக்குச் சாதிச் சண்டை பிடிக்கிறதோ இல்லையோ உங்களுக்குத்தான் பிடித்திருக்கிறது கமல். அதனால்தான், சாதிச் சண்டையினை ஊக்குவிக்கும் படங்களை எடுத்துள்ளீர்கள். சமூகத்தைச் சீரழிக்கும் சாதியை மக்களுக்குப் பிடிக்கும் என்றுகூறி ‘படமெடுப்பது’ விஷம்கொண்ட நாகப்பாம்பின் மனநிலை. அந்த, மனப்பிறழ்விலிருந்து நீங்கள் இன்னும் வெளிவரவே இல்லை.

அதனால்தால், உங்கள் படங்களின் பெயர்கள் மட்டுமல்ல; கதாப்பாத்திரங்களுக்கும் நாயுடு, முதலியார் என்று வைக்கிறீர்கள். இதில், முற்போக்கு முகமூடி வேறு அடிக்கடி அணிந்து கொள்கிறீர்கள். என்னதான் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டாலும் நீங்கள் பார்ப்பனிய சிந்தனையின் பிற்போக்கு முகம்தான்.

சாதீயப் படங்கள் எடுப்பதன் மூலமும் சாதிச் சண்டைகள் பிடிக்கும் என்று சொல்வதன் மூலமும் பார்ப்பனர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பரப்புகிறீர்கள். உங்களைப் போன்றவர்களிடமிருந்து சாதியச் சிந்தனை தொற்றாமல் இருக்க முகக்கவசம் இல்லையே என்பதுதான் வேதனை!

– வினிசர்ப்பனா

Leave a Response