அண்ணா நூலகத்தை இடம் மாற்றக்கூடாது- ஜெ வின் பார்ப்பன மனநிலைக்குக் கிடைத்த அடி

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றக்கூடாது… உயர் நீதிமன்றத்தின் அருமையான தீர்ப்பு.
உலகத் தரமாகக் கட்டப்பட்ட இந்நூலகத்தை உரிய வசதிகள் செய்து கொடுத்துச் செயல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் அவர்களின் முதல் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா அரசுக்கு மேலும் ஒரு அடி..

சொல்லப்போனால் இது இரண்டாவது அடி. சமச்சீர்க் கல்விப் பிரச்சினையில் ஜெயா அரசின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் அடித்து வீழ்த்திதியது முதல் அடி. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது வந்த அந்தத் தீர்ப்பை வேறு வழியின்றி மென்று விழுங்கிக் கொண்டு கம்மிய குரலில் ஜெயா தன் வாயாலேயே அதை அங்கு அறிவித்த காட்சி மறக்க இயலாதது.

இன்னும் சரியாகச் சொல்வதானால் ஜெயாவின் எதேச்சிகார நடவடிக்கைக்குக் கிடைத்த மூன்றாவது அடி இது…

சென்னை காமராசர் சாலையில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இராணி மேரிக் கல்லூரியைத் தகர்த்துவிட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்ட முந்தைய ஜெயா அரசு முடிவெடுத்தபோது மிகப் பெரிய மாணவர் போராட்டம் அந்த எதேச்சாதிகார முடிவை வீழ்த்தியது.

சமச்சீர் கல்வியாகட்டும், அண்ணா நூலகமாகட்டும், இராணி மேரிக் கல்லூரிப் பிரச்சினையாகட்டும் இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் மாணவர்கள், அக்கறையுள்ள பொது மக்கள்..

தெருவில் இறங்கி அவர்கள் போராடினார்கள். ஊடகங்கள் பெரிய அளவில் ஒத்துழைத்தன.

ஜெ ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் இப்படி கல்வி மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினையில் மக்கள் விரோதப் போக்கை மேற்கொள்வது அவருள் உறைந்து நிற்கும் பார்ப்பன மனநிலையின் வெளிப்பாடு என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

Leave a Response