ஜெ ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் பெண்கள் மீதான கொடுமை முடிந்தபாடில்லை.

பாலியல் பலாத்காரம் முதல் வரதட்சணைக்கொடுமை என பல பிரச்னைகளுக்கு பெண்கள் முகம் கொடுத்து வருகின்றனர். டெல்லி,மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகளவில் அரங்கேறியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கையில் இந்தியாவில் பெண்கள் வாழ ஏற்ற பாதுகாப்பான மாநிலங்களாக நாகலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை முறையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு 6- ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியமைத்துள்ள தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 6325 வன்முறைகள் பதிவாகியுள்ளன.

Leave a Response